பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2015

சுன்னாகம் பகுதியில்15 பவுண் நகைகள், இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றையும் கொள்ளை


சுன்னாகம் பகுதியில் இன்று அதிகாலை வீட்டுரிமையாளர்களை கத்தினால் குத்துவோம் என மிரட்டி கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணியளவிலே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் பகுதியில் வீட்டின் பின்புறமாக ஓடுகளைப் பிரித்து உள்நுழைந்த இரு திருடர்கள் வீட்டுரிமையாளர்களை கத்தி மற்றும் தடிகளைக் காட்டி கத்தினால் குத்துவோம் என்று சினிமா பாணியில் அவர்களை மிரட்டி குறித்த வீட்டில் தாலிக்கொடி உட்பட 15 பவுண் நகைகள், இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரும், சமாதான நீதிவானுமான ஒருவரது வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.