பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2015

வடக்கு விவசாய அமைச்சினால் 18பேருக்கு நியமனம் வழங்கி வைப்பு


வடக்கு மாகாண விவசாய மற்றும்  நீர்ப்பாசன அமைச்சுக்களின்  வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 18 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. 
 
வடக்கு விவசாய அமைச்சினால் விவசாய விரிவாக்கத்திற்குரிய தொழில்நுட்ப உதவியாளர்கள் 14 பேருக்கும் நீர்ப்பாசன திணைக்கள பராமரிப்பு பணியாளர்கள் 4 பேருக்கும்  நியமனம் வழங்கப்பட்டது. 

 
இந் நிகழ்வு கண்டி வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சின்  அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.  

 
மத்திய அரசின்  அனுமதியுடன்  புதிதாக உருவாக்கப்பட்ட விவசாய விரிவாக்கத்திற்குரிய தொழில்நுட்ப உதவியாளர்கள் ,  நீர்ப்பாசன திணைக்கள பராமரிப்பு பணியாளர்களுக்குமான நியமனக் கடிதங்களை வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ,  அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன் மற்றும்  விவசாய பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் வழங்கி வைத்தனர். 

 
மேலும் வடக்கின்  ஐந்து மாவட்டங்களுக்கும்  விவசாய விரிவாக்கத்திற்குரிய தொழில்நுட்ப உதவியாளர்கள் 40 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக உள்ளனர். எனினும் இதுவரை 29 பேரின்  வெற்றிடங்கள்  நிரப்பப்பட்டுள்ளன. 
 

மீதமுள்ள 11 பேரின்  வெற்றிடங்களும் மிகவிரைவில் அமர்த்தப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.   
 

 
அத்துடன்  180 நாள் திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன திணைக்கள பராமரிப்பு பணியாளர்களாக பணியாற்றி நியமனம் வழங்கப்படாத 4 பேருக்கும் இன்று நியமனம் வழங்கப்பட்டது என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=571184096320185135#sthash.tL8KVpvK.dpuf