பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2015

பாடசாலைக்கு அருகாமையில் இருந்து ஐஸ்கிறீம் மற்றும் சில்லறை கடைகள் அகற்றப்பட்டுள்ளன என்கிறார் : யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி


யாழில் போதைக்கு பல இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர்.குறிப்பாக பாபுல், மாவா) போன்ற போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்படுகின்றது என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்தார்.
 
 
இன்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் பாடசாலைக்கு அருகாமையில் ஐஸ்கிறீம் கடைகள் மற்றும் சில்லறை கடைகள் என்பவற்றில் இருந்தே இவ்வாறான போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
 
எனவே தான் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள ஐஸ்கிறீம் கடைகள், சில்லறை கடைகள் என்பன அகற்றப்பட்டுள்ளன.எதிர்காலத்திலும் அகற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
மேலும் தனியார் வகுப்புகளிற்கு மாணவர்கள் பலர் செல்கின்றனர் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் அவர்களை கண்காணிப்பதற்காகவும் பொலிஸார் மாலை 4 மணிமுதல் இரவு 9மணிவரை சைக்கிள் ரோந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
எனவே சட்டத்தை நிலைநாட்ட வேண்டுமானால் மக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.