பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2015

மலசல குழிக்குள் விழுந்து பெண் உட்பட 4 பேர் பலி

மலசலகூட குழிக்குள் விழுந்து ஒரு பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று ரம்புக்கன மீதெனிய பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.

மீதெனிய பரபே என்ற இடத்திலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மலசலகூட குழிக்கு மேல் பரப்பிலுள்ள கொங்கிaட் உடைந்து வீழ்ந்ததால் 34 வயதான பெண் மலசல குழிக்குள் விழுந்துள்ளார். உதவி கோரும் குரல்கேட்டு அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் ஓடிச் சென்று காப்பாற்ற முற்பட்டபோது அவர்கள் குழிக்குள்ளிருந்து வந்த விசவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த நால்வரின் சடலங்கள் ரம்புக்கனை வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் கேகாலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டவுள்ளன.
பிரேத பரிசோதனையின் பின்னரே விஷவாயு சுவாசித்ததால் உயிரிழந்தார்களா? என்பது ஊர்ஜிதமாக கூறமுடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேக்கர தெரிவித்தார்.