பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2015

மாயமான சிறிய ரக விமானம் கண்டுபிடிப்பு - சீர்காழி அருகே கடலுக்கடியில் 850 மீட்டர் ஆழத்தில்



ஆபரேசன் ஆம்லா பயிற்சியின் போது மாயமான சிறிய ரக விமானம் சீர்காழி அருகே கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கடலுக்கு அடியில் 850 அடி ஆழத்தில் உள்ளது என்று  ஐஜி சர்மா கூறினார்.  விமானம் இருக்கும் இடம் கடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.   

விமானத்தை மீட்க நீர்மூழ்கி கப்பல் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய  கடலோரக் காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் என்கிற குட்டி விமானம் கடலூரிலிருந்து தினமும் நாகப்பட்டினம் வரை ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி கடந்த 8ம் தேதி இரவு கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, திசைகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த விமானம் திடீரென்று மாயமானது, இன்று 14ம் தேதி கண்டுபிடிக்கப்படுள்ளது..