பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2015

வித்தியாவின் 31ஆம் நினைவஞ்சலியை சுவிசில் நடத்திய எட்டு அமைப்புக்கள் கல்லாறு சதீஸ் கலந்து சிறப்பித்தார்

Arulrasa Nageswaran இன் புகைப்படம்.
சுவிஸ் சென்காலன் நகரில் எட்டு தமிழ் அமைப்புக்கள் இணைந்து வித்தியாவின் 31ஆம் நாள் நினைவஞ்சலியை சிறப்பாக நடத்தி இருந்தார்கள் அந்த நிகழ்வு பற்றி கல்லாறு சதீஸ் பின்வருமாறு சொல்கிறார் .
காமுகர்களால்,கொடிய மிருகத்தைவிட கேவலமானவர்களால் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் 31 ம் நாள் நிகழ்வை சுவிஷ் சென்ற்காளன் மாநில மக்கள்
அஞ்சலி நிகழ்வாக நடாத்தினர்.
றயின்தாளர் தமிழ் மன்றம்,
தமிழ்ர் ஒற்றுமைக் கழகம் வீல்,
தமிழர் இல்லம் செங்காளன்,

தமிழ்ச் சங்கம் றோசாக்,
முத்தமிழ் மன்றம் சர்க்கான்ஷ்,
ஶ்ரீ கதிர்வேலாயுதர் சுவாமி ஆலயம் சென்மார்க்கிரட்டன்,
வாணிவிழாக் குழு செங்காளன்,
தமிழ் இளைஞர் விளையாட்டுக் கழகம் செங்காளன் ஆகிய எட்டு அமைப்புகள்
ஒன்றிணைந்து வித்தியாவிற்கான அஞ்சலி நிகழ்வை நடாத்தினர்.
திரு.பஞ்ச் அவர்களின் ஒருங்கிணைப்பில்
திரு.செல்வாவின் தொகுப்பில் காமுகர்களுக்குக்
கண்டனமும்,வித்தியா குடும்பத்திற்கு அனுதாபமும்,வித்தியாவின் ஆத்ம சாந்திக்கு அஞ்சலியுமாக அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.
இப்படி எமது தமிழ் அமைப்புகள் ஒற்றுமையாக நிழ்த்திய இந் நிகழ்வுக்கு என்னை அழைத்தபோது
எனது ஆத்ம கடமையைச் செய்யும் நோக்கில் கலந்து வித்தியாவிற்கு அஞ்சலி உரையாற்றினேன்.
எனதுரையில்;
"மகளே சென்று வா!
மரணம் பூரண விடுதலை!!
உன்னைக் கொன்ற கயவர்களுக்கு
மரண தண்டனையல்ல,
அவர்கள் மரணம் வரை
தினம்தோறும் மரணம்
தண்டனையாகத் தரப்படவேண்டும்"
-கல்லாறு சதீஷ் - -