பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2015

னைவரும் விட்டு சென்ற போது அம்மாவுடன் இருந்த மகன் நான்!– மஹிந்த


தான் ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டுபடுத்த மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று தெஹிவளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் அன்றில் இருந்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலே போட்டியிட்டேன், சிறுபான்மையினர் வேறு கட்சியிலே போட்டியிட்டார்கள்.
மகள், மகன் என அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிளவு படுத்தும் போது அம்மாவுடன் இருந்த மகன் நான் மாத்திரமே.
இன்று சிறுபான்மை அரசாங்கம் ஆட்சி செய்கின்றமையினால் அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது.
பங்கு சந்தை கூட செயலிழந்து போய் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.