பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2015

ஈ.பி.டி.பி. பிரதேச பொறுப்பாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு


ஈ.பி.டி.பி. அச்சுவேலி பிரதேச பொறுப்பாளரும் கட்சியின் முக்கிய பிரமுகருமான அச்சுவேலியை சேர்ந்த மாரிமுத்து தர்மராசா (வயது 60) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளார்.
தர்மராசா தான் வசித்து வந்த வீட்டின் அறையில் கால்கள் முழங்கால் மட்டத்தில் மடிந்த நிலையில் கழுத்தில் சுருக்கிட்டு தூங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.
அச்சுவேலி பொலிஸார் தகவல் அறிந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
வலி.கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், அச்சுவேலி பிரதேச பொறுப்பாளரும் ஈ.பி.டி.பி.யின் முன்னாள் பிரமுகருமான தர்மராசாவின் சடலம் கால் மடிந்த நிலையில் இருந்தது தொடர்பாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி பிரதேச பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்