பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூன், 2015

முன்னாள் எம்.பி ரவிராஜ்கு சிலை


யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ரவிராஜ் என்பவருக்கு அவரது ஆதரவாளர்களால் சிலை ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
 
 
அதன்படி இன்றைய தினம் சாவகச்சேரியில் 7 அடி உயரமுடைய சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்றது.
 
குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கலந்து கொண்டு சிலைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
 
 
மேலும் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் குருகுலராஜா,வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சயந்தன், சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.