பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூன், 2015

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திருத்தம் செய்யப்பட்ட நேர அட்டவணை


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையில் பரீட்சைகள் திணைக்களம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.


பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
 
மேலும் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதால் மீண்டும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மீள ஆரம்பமாகி செப்டம்பர் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
 
இதேவேளை, 5 ஆம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்டவாறு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார குறிப்பிட்டார்