பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2015

ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை

ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.  அவ்வாறு வழங்கினால் 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்க கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கீழ் 30 நாட்களுக்குள் 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும்.  கூட்டமைப்பின் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் இந்தத் திட்டத்திற்கு இணங்கியுள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் அரசாங்க அதிகாரத்தை கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் நேரடியாக கோரப்பட உள்ளது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆட்சி மாற்றம் ஏற்படுத்தாமலேயே 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும் என ஜாதிக ஹெல உறுமய கருத்து வெளியிட்டுள்ளது.