பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2015

லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியே சுதா சந்திரன் உள்ளே

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி.
முதலில் இதனை நிர்மலா பெரியசாமி நடத்தினார். அதன் பிறகு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தியபோதுதான் நிகழ்ச்சி மிகவும் பாப்புலரானது. பல குடும்ப பிரச்சினைகளை நிகழ்ச்சி தீர்த்து வைத்தது. மறைக்கப்பட்ட பல கொலைகளை கூட வெளியே கொண்டு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" டயலாக் வைரலாக பரவி சூர்யா தன் படத்தில் பேசுகிற அளவிற்கு பாப்புலரானது. இப்போது இந்த டயலாக்கை வைத்தே லட்சுமி ராமகிருஷ்ணன் தனியாக நிகழ்ச்சி நடத்துகிறார். மேலும் அவர் சினிமா இயக்குவதில் பிசியாகி விட்டதால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார்.

இனி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடிகை சுதா சந்திரன் நடத்த இருக்கிறார். மயூரி படத்தின் மூலம் அறிமுகமான சுதா சந்திரன் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் சுதா சந்திரன் இப்போது நிகழ்ச்சி நடத்த வந்திருக்கிறார்.