பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2015

சரணடைந்த விடுதலைப்புலிகள் காணாமல் போனமை தொடர்பில் ஜெனீவாவில் கூட்டம்


இறுதிப்போரின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலக பிரதானி புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் காணாமல் போனமை தொடர்பில் கூட்டம் ஒன்று ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது
எதிர்வரும் 24ஆம் திகதியன்று இந்தக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.ராமதாஸ் தலைமையிலான பசுமை தாயகம் அமைப்பு, பிரித்தானிய தமிழ்ப்பேரவை, அமரிக்காவின் தமிழர் பாதுகாப்பு சபை என்பன இதனை ஏற்பாடு செய்துள்ளன.
பசுமை தாயக பேச்சாளர் கே.பாலு மற்றும் அருள் ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளார்.
பாலுவின் தகவல்படி இலங்கையின் இறுதிப்போரின் போது விடுதலைப்புலிகள் உட்பட்ட 19 ஆயிரம் தமிழர்கள் இலங்கை படையினரிடம் சரணடைந்தனர். எனினும் அவர்கள் தொடர்பில் 6 வருடங்களாகியும் தகவல்கள் இல்லை என்றுக்குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும். இதன்மூலமே இலங்கையில் எதிர்பார்க்கும் சமாதானத்தை அடைய முடியும் என்று பாலு குறிப்பிட்டார்.