பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2015

போதைவஸ்து பாவனை அனைவரையும் தீயவழிக்கு இட்டுச் செல்லும்- கல்முனை பொலிஸ் அதிகாரி













போதைவஸ்து பாவனை என்பது ஒட்டுமொத்த மனிதர்களையும் தீய வழிக்கு இட்டுச்செல்லும் ஒரு கருவியாக தொழிற்படுகின்றது என கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஏ.டபிள்யு.ஏ.கபார் தெரிவித்தார்.
மாணவர் மத்தியில் புகைத்தலை தடுப்பதற்கான அறிவூட்டல் கருத்தரங்கானது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி முதல்வர் விறையினர் செலர்  தலைமையில் கல்லூரி கிளனி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை பொறுப்பேற்று நடத்துவதற்காக கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எபிள்யு.ஏ.கபார் மற்றும் கல்முனை பொலிஸ்  உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், தரம் 9,10,11 ஆம் தரத்தில் உள்ள ஆண் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போதைய காலச்சூழலில் போதைவஸ்து பாவனை என்பது மிகவும் மோசமான நிலையினை அடைந்துள்ளதனை. அவதானிக்க முடிகின்றது அதனடிப்படையில் இவ்வாறான பாவனையில் இன்றும் எத்தனையோ, இலட்சக்கணக்கானவர்கள் அதற்கு அடிமைப்பட்டு அடிமைகளாகி இருக்கின்றார்கள்.
குறிப்பாக போதைவஸ்து பாவனையில் மிக முக்கிய இடம் பிடிப்பது புகைபிடித்தலாகும். இந்த பழக்கமானது சிறு பராயத்திலிருந்தே சிலரிடம் ஆரம்பமாகிவிடுகின்றது. இதனால் பலர் சிறுபராயத்திலே இதற்கு அடிமைகளாகி விடுகின்றார்கள்.
புகை பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதென்பது இலகுவான காரியமல்ல. புகையிலையில் நிக்கொட்டின் எனும் இரசாயன பதார்த்தம். அடங்கியிருப்பதனால் பல தீய விளைவுகளை உண்டு பண்ணுகின்றது.
புகை பிடிப்பவர் பாதிக்கப்படுவதுடன் அவருக்கு அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுகின்றார். ஒரு வருடத்திற்கு 6 இலட்சம்பேர் புகைபிடித்தலால் இறக்கின்றார்கள். அதே போன்று புகைபிடிக்காமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் 60000 பேர் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.
இதுதான் இந்த புகைபிடித்தலால் வரும் பெருங்கேடாகும்.
சட்டவிரோதமான முறையிலும் புகைத்தலை ஊக்குவிப்பவர்களும் எம்மத்தியில் இருக்கின்றார்கள் சிகரட்டை எடுத்துக்கொண்டால் 4000 வரையான நச்சு தன்மைகளைக்கொண்ட இரசாயன பதார்த்தங்கள் அதில் இடங்கியிருக்கின்றது. 
புகைபிடிப்பர்களில் வருடமொன்றிற்கு 25 வீதமானோர் அதில் இருந்து விடுபடவேண்டும் என்று நினைக்கின்றார்கள் ஏனைய 75 வீதமானோர் இந்தப்பழக்கத்தில் இருந்து மீளமுடியாதவர்களாக தத்தளிக்கின்றார்கள் எனவும் கூறினார்.