பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு


சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.  அதன்பிறகு, தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூர் நபர்கள் அனைவரும் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் வியாழக்கிழமை மாலை 5 மணியில் இருந்து அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக் கூடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.