பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2015

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தீவிர சிகிச்சை : உடல்நிலையில் முன்னேற்றம்

 

 

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வருடங்களுக்கு முன்பு  இருதய அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர், வயோதிகம் காரணமாக திரைப்பட விழாக்களில் பங்கேற்காமல் இருந்தார். வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில்,  எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட சிரமப்பட்டார். உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நேற்று 86 வயது நிறைவடைந்து 87 வயது பிறந்தது.