பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2015

அரசியலில் கால் வைக்கமாட்டேன்; என்கிறார் கோத்தா


அரசியலில் ஈடுபடும் உத்தேசம் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
உடமல்ல மகாவிகாரையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் மேற்கண்ட விடயத்தினை தெரிவு படுத்தியுள்ளார்.
 
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 
 
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.  நான் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நாட்டின் தேசியப் பாதுகாப்பை சிறந்தமுறையில் செயற்படுத்தினேன். 
 
யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டு காலப் பகுதியிலும் தேசியப் பாதுகாப்பை தாம் உறுதி செய்திருந்தேன். 
 
குறித்த காலப்பகுதியில் எங்கும் எவரும் சுதந்திரமான செல்லக்கூடிய நிலைமை காணப்பட்டது. அதேபோன்று புதிய அரசிலும் தேசிய பாதுகாப்பு இருக்க வேண்டும்.
 
தற்போது நாட்டின் பாதுகாப்பு குறித்து எதனையும் கூற முடியாது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.