பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2015

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானதே!– சட்டத்தரணி கனகேஸ்வரன்


பாரிய நிதி மோசடி குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் உச்ச நீதிமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜராகி நீதிமன்றில் வாதாடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நேற்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை எந்தவொரு நீதிமன்றிலோ அல்லது வேறும் விதத்திலோ பசில் உள்ளிட்ட தரப்பினர் நிராகரிக்கவில்லை.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மற்றும் கைதுகளை அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படுவதாக வெளிக்காட்டிக் கொள்ள பசில் ராஜபக்ச உள்ளிட்ட திவிநெகும அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.
எந்தவதமான சட்ட ரீதியான அடிப்படையும் இன்றி அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டவர்களுக்கு தண்டனை விதிக்குமாறு நாட்டின் 6.3 மில்லியன் மக்கள், அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கையை சிலர் அரசியல் பழிவாங்கல்களாக வெளிக்காட்டி குற்றச் செயல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் உள்ளிட்ட நீதவான் குழு மனுவை பரிசீலனை செய்தது.
மனு எதிர்வரும் 24ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.