பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2015

நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிப்பு


நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாரியளவில் நிதி மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் புதிய அரசாங்கத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் இந்தப் பிரிவு நிறுவப்பட்டது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அனைத்து தொலைபேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கட்டணம் செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், கட்டணத்தைச் செலுத்தி தொலைபேசி இணைப்புக்களை மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
விசாரணைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் புதிதாக விசாரணைகள் நடத்தப்படாது எனவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைப் பிரிவு தொடர்பில் நீதிமன்றில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதனால் இவ்வாறு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.