பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2015

அதிகாலையில் கலைந்தது நாடாளுமன்றம்

news
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் இன்று அதிகாலை கலைக்கப்பட்டது.அதனடிப்படையில் எட்டாவது நாடாளுமன்றத்துக்குரிய பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
 
 
தேர்தலுக்குரிய வேட்புமனுத் தாக்கல் ஜீலை 6 ஆம் திகதி முதல் ஜீலை 15 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் புதிய நாடாளுமன்றத்தின் அமர்வு செப்ரெம்பர் 2 ஆம் திகதி நடைபெறும்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பது தொடர்பிலான பரபரப்பு கடந்த சில நாள்களாக நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை ஜனாதிபதியினால் 7 ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
 
20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடந்த இரண்டு தினங்களாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று வந்த நிலையில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாத நிலையிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.