பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2015

பொதுத் தேர்தலால் க.பொ.த உ/த பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்படலாம்
என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பரீட்சைகளை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர்கள், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி குறித்த முடிவு அறிவிக்கப்படவுள்ளது. 

ஆகஸ்ட் 4ம் திகதி தொடக்கம் 28ம் திகதிவரை பரீட்சை நடத்த தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எனினும் தேர்தல் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ளதால் மேற்கூறிய திகதியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.