பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2015

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார் : விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்


சர்வதேச விதவைப் பெண்கள் தினம் யூன் 23 ஆம் திகதி உலகம் பூராகவும் அனுஸ்டிக்கப்படுகின்றது.

 
இத்தினத்தையொட்டி பெண் தலைமைத்துவக் குடும்பத் தலைவிகளுக்கு வாழ்வாதாரமாகத் தென்னங்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கும் திட்டமொன்றை வடமாகாண சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின்; சம்மேளனம் முன்னெடுத்துள்ளது.
 
இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று  யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபோது, வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார்.
 
மேலும் தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட கலப்பு இனமான சீ.ஆர்.ஐ–60  என்ற தென்னை ரகமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. 
 
ஏனைய மாவட்டங்களிலும், அம்மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பத் தலைவிகளுக்கு இவ்வாறு தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட உள்ளன. 
 
நெதர்லாந்து மனித நேயச் செயற்பாடுகளுக்கான கூட்டுறவு அமைப்பின் நிதி உதவியுடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
வடமாகாண சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் செ.இரகுநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ.கணேசு, தென்னை அபிவிருத்திச் சபையின் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் ஆகியோரோடு சிக்கனக் கடன் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் மாவட்டத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=623124101423673976#sthash.q6hOnDLc.dpuf