பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2015

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அதிகளவில் போலி சாட்சியமளிக்கப்படுகின்றது!

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அதிகளவில் போலி சாட்சியங்கள் அளிக்கப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி ஜெனீவாவில் வெளியிடப்பட உள்ளதாக இலங்கை போர்க் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கைக்கு போலியான சாட்சியாளர்கள் பலர் சாட்சியமளித்துள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் இவ்வாறு அதிகளவான போலி சாட்சியாளர்களை அழைத்து சென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்க செய்துள்ளது.
இவ்வாறு போலி சாட்சியாளர்கள் அழைத்துச் செல்லப்படுவதனை ஜெனீவா வாழ் இலங்கையர்கள் அவதானித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடமையாற்றி வரும் தமிழர்கள் இவ்வாறு போலி சாட்சியமளிக்க உதவியுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் ஐந்து பேர் ஜெனீவாவில் தங்கியிருந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.