பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2015

சுவிட்சர்லாந்தில் நில நடுக்கம்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்



சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வாலெஸ் மண்டலத்தில் மிதமான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதில் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
வாலெஸ் மண்டலத்தில் உள்ள Sion என்ற பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இன்று நற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 3.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதால், நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்திலிருந்து சில கிலோ மீற்றர் தூரம் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் தொடர்பாக சுவிஸ் நில அதிர்வு மையம் வெளியிட்ட செய்தியில், 3.1 என்ற அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் அப்பகுதியில் பாதிப்புகளை எதுவும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிலநடுக்கமானது தொடக்கத்தில் குறைந்த அளவு நில அதிர்வுகளுடன் ஆரம்பித்து பெரிய அளவிலான நில நடுக்கம் ஏற்படமா என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறந்து உள்ளனர்.
நேபாள நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மோசமான நில நடுக்கத்தை தொடர்ந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலும் அடுத்தடுத்த மிதமான நில நடுக்கங்கள் உணரப்பட்டது தொடர்ந்து இன்று சுவிட்சர்லாந்து நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.