பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2015

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் ஆட்சி செய்ய மக்கள் ஒருபோதும் இடமளியார்; அஜித் பெரேரா


ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியடுவதற்கான வேட்பு மனுக்கள்
வழங்கப்பட மாட்டாது என முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
ஓகஸ்ட் 17ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் யூலை 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி நண்பகல் வரை தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தக் கருத்தினை முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும்  தெரிவிக்கையில், 
 
தேர்தல் முறைமையில் மாற்றம் அறிமுகம் செய்யப்படாத போதிலும் அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க மாட்டார்கள் 
 
எனினும் யார் யார் குற்றவாளிகள் என்பது கட்சிகளுக்கு தெரியும் எனவே நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது.
 
மேலும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தம்மை ஆட்சி நடாத்த மக்கள் விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.