பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூன், 2015

சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் கட்சி தலைவர் முத்து சிவலிங்கம் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் இடம்பெறற கலந்துரையாடலுக்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதற்கமைய 05 மாவட்டங்களுக்கு வேட்பாளர்களை நியமிப்பதற்கு இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலே வேட்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் 05 வேட்பாளர்களை நியமிப்பதற்கு கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.