பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2015

உலக அகதிகள் நாள் இன்று அனுஸ்டிப்பு


உலக அகதிகள் தினம் ஆண்டு தோறும் ஜூன் 20ம் திகதி இந்த தினம் நினைவுக்கூறப்படுகிறது.
 
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 2000 ஆம் ஆண்டு இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
 
அதற்கு முன்னர் ஆபிரிக்க அகதிகளின் தினம் ஜூன் 20ம் திகதி நினைவுக்கூறப்பட்ட நிலையில், அதனையே சர்வதேச அகதிகள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற சமுகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
 
இலங்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள் காரணமாக,ஐரோப்பா  இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஈழ அகதிகள் இடம்பெயர்ந்துள்ளனர்.
 
அத்துடன் உள்நாட்டிலும் போர், சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில்,இன்னும் பல முகாம்களில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.