பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2015

ஜெ., விடுதலையை எதிர்த்த வழக்கு : 27ல் விசாரணை



சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகர் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் திருத்தப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசின் திருத்தப்பட்ட மனுவை கடந்த 16ம் தேதி உச்சநீதிமன்ற பதிவாளர் ஏற்றார். இந்த மேல்முறையீட்டு மனு மீது வரும் 27ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் திருத்தபட்ட மேல்முறையீட்டு மனுவையும், உச்சநீதிமன்ற பதிவாளர் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.