பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2015

தேர்தல் கண்காணிப்புப் பணிகள் நாளை ஆரம்பம்


 நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவினர் நாளை முதல் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர். 

இம்முறை தேர்தலுக்காக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் 110 பேர் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர். 
ஐரோப்பிய சங்கம். பொதுநலவாய நாடுகளின் சங்கம் மற்றும் தெற்காசிய கண்காணிப்பாளர்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளே இவ்வாறு கலந்து கொள்ளவுள்ளனர். 
எதுஎவ்வாறு இருப்பினும் இதுவரை 50க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வந்துள்ளதுள்ளதோடு,மேலும் சிலர் இன்று வரவுள்ளனர். 
மேலும் தெற்காசிய கண்காணிப்பாளர்கள் வலையமைப்பின் பிரதிநிதிகள் இம் மாத இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.