பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2015

சென்னை அணிக்குத் 2 ஆண்டு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிக்கு 2 ஆண்டு தடைவிதித்தது உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு பரபரப்பு தீர்ப்பு.

லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. லோதா குழுவின் அறிக்கையில் இன்று கூறப்பட்டதாவது:

குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரியாகச் செயல்பட்டார். அவர் அதிகமுறை பெட்டிங்கில் ஈடுபட்டார். இந்திய சட்டப்படி சூதாட்டம் மிகப்பெரிய குற்றம்.

குந்த்ரா மீது சூதாட்டப் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரபலமான சூதாட்டத் தரகர் மூலமாக குந்த்ரா அடிக்கடி பெட்டிங் செய்துள்ளார்.

ராஜஸ்தான் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.

சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகிகள் (குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா) பெட்டிங்கில் ஈடுபட்டதன் மூலம் விளையாட்டின் மாண்பை குறைத்துவிட்டார்கள். வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தடை விதிக்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது.

ஐபிஎல் நடவடிக்கைகளில் பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது.