பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2015

ஜனாதிபதி கட்சியில் இருந்து பதவி விலகல்?


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலமைப் பொறுப்பை வகிக்கும் மைத்திரிபால
சிறிசேன அதிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் ஜனாதிபதி இது தொடர்பில் விசேட உரையொன்றை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிக்கு தமது கட்சியின் ஊடாக வேட்புமனு வழங்கியதையடுத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த கட்சிகளில் இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலமைப் பொறுப்புகளிலிருந்து பதவி விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது