பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2015

சென்.ஜோன்ஸ் கல்லூரியில் 30 மில்லியன் ரூபா செலவில் புதிய தொழில்நுட்ப பீட கட்டடம்


சென்.ஜோன்ஸ் கல்லூரியில் 30 மில்லியன் ரூபா செலவில் 4 மாடி தொழில்நுட்ப பீட கட்டடம் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 
குறித்த கட்டடத்தை கொழும்பு ஆயர் திலோராஜ் கனகசபை மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
 
 
மேலும் 5 ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை தொழில்நுட்ப பீட மாணவர்களால் தொழில்நுட்ப கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
 
இந்தக் கண்காட்சியானது சமூக சீரழிவுகளில் இருந்து மக்கள் விழிப்படையும் விதத்திலும், மாணவர்களின் தொழில்நுட்பக் கல்விக்கு வழிகாட்டும் வகையிலும் அமைந்துள்ளது.
 
மேலும் குறித்த தொழில்நுட்பக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கம் தொடர்பில் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்பணி. ஞானப்பொன்ராஜா கருத்து தெரிவிக்கையில், 
 
இலங்கையில் உள்ள 250 பாடசாலைகளுக்கு அரச உதவியுடன் 30 மில்லியன் ரூபா செலவில் இவ்வாறான தொழில்நுட்ப பீடம் அமைத்துக் கொடுக்கப்படுகின்றது.ஆனால் தனியார் பாடசாலைகளுக்கு அரசால் இவ்வாறான உதவிகள் வழங்கப்படுவதில்லை.
 
ஆனால் தனியார் பாடசாலைகள்  தொழில்நுட்ப பீடத்தை அமைத்து அதற்குரிய ஆய்வுகூட உபகரணங்களை வழங்கும் போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு அனுமதியளித்துள்ளது.இதனால் நாங்கள் 30 மில்லியனை வங்கிக் கடனாகப் பெற்று குறித்த கட்டடத்தை நிர்மாணித்துள்ளோம்.எனினும் மேலதிகமாக எமக்கு 30மில்லியன் ரூபா தொழில்நுட்ப இயந்திரங்கள், ஆய்வுகூட உபகரணங்களை கொள்வனவு செய்யத் தேவைப்படுகின்றது.எனவே இதற்குரிய பணவசதியை பாடசாலை பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கைகோர்க்குமாறு தெரிவித்தார்.
 
மேலும் வடமாகாண பாடசாலை மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு, வசதியான களமாக இந்த தொழில்நுட்ப பீடத்தை  அமைத்துக் கொடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=550864136909850237#sthash.G1XRNq2M.dpuf