பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2015

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பு பணிகள் மந்த கதியில்


இந்திய அரசின் நிதியுதவியால் புனரமைக்கப்பட்டு வருகின்ற யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு இன்னமும் முடிவுறா நிலையில் உள்ளது.
 
இந்திய அரசினால் 144 மில்லியன் ரூபா செலவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு  புனரமைப்பிற்கான அடிக்கல்லானது கடந்த வருடம் ஆகஸ்ட் 27 ஆம் திகதியன்று நாட்டப்பட்டது.
 
 
குறித்த விளையாட்டரங்கின் புனரமைப்புச் செயற்திட்டம் நிறைவு பெறும்  காலவரையறை 9 மாதங்கள் . எனினும் 9 மாதங்கள் கடந்த நிலையிலும் இந்த மைதான புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன.
 
எனினும் விளையாட்டரங்கின் புனரமைப்பு பணிகள் இந்த வருட இறுதிக்குள் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.