பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2015

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு 50,000 ரூபா வழங்க முடிவு; அமைச்சர் டெனீஸ்வரன்


news
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஐம்பது ஆயிரம்  ரூபாவினை வழங்க கிராம அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் சுமார் 324 குடும்பங்கள் அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
 
அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவுள்ளதாக வடக்கு மாகான கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது,
 
முதல் கட்டமாக மன்னார் மாவட்டடத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்க்காக எதிர்வரும் வாரம் கிராம அபிவிருத்தி திணைக்களமூடாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம்  ரூபா வழங்கப்படவுள்ளது.
 
எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் குடும்பங்களை அமைச்சர் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
 
அதேபோல 24 ஆம்  திகதி காலை முல்லைத்தீவு மாவட்டத்திலும், மாலை கிளிநொச்சி மாவட்டத்திலும் இவ்வாறான சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்