பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2015

எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் மஹிந்த விசேட உரை


எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
100 நாள் அரசாங்கத்தினால் பின் தள்ளப்பட்ட நாட்டை எவ்வாறு மீளக் கட்டியெழுப்புவது என்பது குறித்து அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி விளக்க உள்ளார்.
எதிர்வரும் 9ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அனுராதபுரத்தில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஏக்கநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெறும் கூட்டத்தின் பின்னர் மாவட்ட மட்டத்தில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
அனைத்து பிரதான கூட்டங்களிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்பார் எனவும் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.