பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2015

ஐ.ம.சு.முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு அனுமதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அடுத்த சில தினங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் தயார் செய்யப்படும் எனவும் அதன் பின்னர் கூட்டணி கட்சிகளின் பங்களிப்போடு தேர்தல் நடவடிக்கை குழு உருவாக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.