பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2015

தமிழரசுக்கட்சி முல்லையிலும் பிளவு!(சொக்கன்சிஷ்யன்)



நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையேயான முரண்பாடுகள்
முடிவுக்கு வராதேயுள்ளன. திருகோணமலையிலும் கூட்டமைப்பு கட்சிகளிடையே குழப்பம் தொடர்கின்றது. அக்கட்சியின் ஆசனப்பங்கீடு தொடர்பாக திருகோணமலை கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் அதன் தலைமைக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. மூதூர் பிரதேசத்தின் தமிழரசுக்கட்சியின் தலைவர் திருச்செல்வம், உறுப்பினர் மதியழகன் உட்பட மேலும் 07 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தினை கட்சி தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பந்தன் உள்ளிட்ட முதியவர்கள் கூடாரமாக கூட்டமைப்பு மாறியிருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனிடையே தமிழரசுகட்சி முல்லைத்தீவு மாவட்ட இளையோர் அணியில் இருந்து ஒரு பகுதி பிரிவடைந்துள்ளது. ஜனகன் என்பவரிற்கு தேர்தலில் தமிழரசுக்கட்சி ஆசனம் வழங்க கோரியே ஒருபகுதியினர் பிளவுபட்டுள்ளனர். அதே போன்று முல்லைதீவு தமிழரசுக்கட்சி தலைவரும் வடமாகாணசபை பிரதி அவைத்தலைவரும் கட்சியின் பொருளாளருமான அன்ரனி ஜெகநாதன் வேட்பாளர் தெரிவினை கண்டித்து தனது அனைத்து பதவிகளிலிருந்தும் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.