பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2015

ரங்கா ஆதரவு கட்சியான பிரஜைகள் முன்னணியில் அனந்தி

அனந்தி, வித்தியாதரன் தரப்பு சுயேட்சையாகக் களத்தில்(வெளிமடன் )நாடாளுமன்ற தேர்தலில் வடமாகாணசபையின் கூட்டமைப்பு


 உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையிலான அணிகள் தனித்து சுயேட்சையாக களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று இவர்கள் இருவரும் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை இன்று செலுத்தியதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான ரங்கா ஆதரவு கட்சியான பிரஜைகள் முன்னணியில் அனந்தி களம் இறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனிடையே யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ள பிரதான கட்சிகள் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ள நிலையில் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஏ- 9 வீதியைத் தவிர்த்து மாற்று போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.


நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதால் ஏ-9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். அத்துடன் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளது நன்மை கருதி நாளையதினம் காலை 8.30 முதல் மாலை வரை மாவட்ட செயலக வீதியைத்தவிர்க்குமாறு பொதுமக்களிடமும் பயணிகள் மற்றும் வாகன சாரதிகளிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அதற்கமைய மாவட்ட செயலக முன்வீதியை தவிர்க்க பொதுமக்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.