பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூலை, 2015

கஞ்சா கலந்த மருந்துப் பொருட்களுடன் ஒருவர் யாழில் கைது; தொடர்ந்தும் நடவடிக்கை என்கிறார் வூட்லர்



கஞ்சா கலந்த மருந்துப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை என்பற்றை தம்வசம் வைத்திருந்தார்  என்ற குற்றச்சாட்டில் கஸ்த்தூரியார் வீதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  யு.கே. வூட்லர் தெரிவித்தார்.

 
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும்  பாடசாலை மாணவர்களை போதையில் இருந்து பாதுகாத்தல் தொடர்பில் யாழ்ப்பாண தலைமைப்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
 
பாடசாலை ரீதியாகவும், தனியார் வகுப்புக்கள் மற்றும்  பெற்றோர்களை சந்தித்தும்  எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். தொடர்ந்தும்  நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். 
 
இந்தநிலையில் பொதுமக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இதற்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இதேபோல எதிர்வரும் காலங்களிலும் பொதுமக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

 
இன்று காலை பொதுமக்கள் எமக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் கஸ்த்தூரியார் வீதி, யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றிலிருந்து கஞ்சா கலந்த மருந்துப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட  புகையிலை என்பன கைப்பற்றப்பட்டது. 
 
சந்தேகத்தின்பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். அவருடன்  சம்பந்தப்பட்ட மேலும் பலர் உள்ளனர் என விசாரணையில் தெரியவருமிடத்து விசாரணைகள் தொடரும்.
 
குறித்த நபரை நீதிமன்றத்திலும் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,  உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்டனர்.
 
மேலும் , யாழ்ப்பாண பொதுமக்களை பாதுகாப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளோம் என்றும்  அவர் மேலும்  தெரிவித்தார்.
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=792284169027662171#sthash.crEWoIcn.dpuf