பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூலை, 2015

சிறந்த ஊடகவியலாளருக்கு விருதுகள் வழங்கும் விழா நாளை


இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து 16 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள 2014 ஆம் ஆண்டுக்கான
அச்சு ஊடகத்துறையைச் சேர்ந்த சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாளை  ​ மாலை 07 மணிக்கு கல்கிசை மவுன்ட் லெவனியா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
 
இவ்வைபவத்திற்கு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முரண்பாட்டுத் தீர்வுக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நாடாளுமன்ற செயலாளர் நாயகமுமான நிஹால் செனவிரத்ன பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார். 
 
விருதுகளுக்காக தகுதியானவர்களை தெரிவு செய்வதற்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கிணங்க அச்சு ஊடகத்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர்களிடமிருந்து சமர்ப்பிக்கப்பட்டிருந்த சுமார் 250 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 14 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
வருடத்தின் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான மேர்வின் டி. சில்வா விருது, விறுவிறுப்பான செய்திக்கான விருது, புலனாய்வு செய்திக்கான விருது, சிறந்த சுற்றாடல் செய்திக்கான விருது, நிறந்த சமூக விடய அறிக்கையிடலுக்கான சுப்பிரமணியம் செட்டியார் விருது, சிறந்த விளையாட்டு செய்தியாளருக்கான விருது, இளம் செய்தியாளருக்கான டென்சில் பீரிஸ் விருது,சிறந்த புகைப்படப் பிடிப்பாளர் விருது, சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான விருது, சிறந்த வணிக செய்தியாளருக்கான விருது, சிறந்த கட்டுரையாளருக்கான உபாலி விஜேவர்த்தன விருது, சிறந்த கேலிச்சித்திர வரைஞருக்கான விருது, சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பீ.ஏ.சிரிவர்த்தன விருது, நெருக்கடி நிலைமையின் கீழ் கடமையாற்றியமைக்கான போராசிரியர் கைலாசபதி விருது என்ற அடிப்படையில் இந்த 14 பிரிவுகளும் அடங்குகின்றன.
 
இந்தப் பிரிவுகளின் அடிப்படையிலான விருதுகளுக்கு மேலதிகமாக ஊடகத்துறைக்கு வாழ்நாள் முழுவதும் சேவையாற்றிய மூத்த ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டு வாழ்நாள் சாதனையாளர்களாக தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். 
 
அவ்வகையில் 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெறவுள்ளோர் - பினோய் குமார் விக்கிரம சுரேந்திரா இலத்தீப் பாரூக், நிஹால் ரட்னாயக்க, சரணபால பமுனுவா,மற்றும் எஸ்.தில்லைநாதன் ஆகியோர்களாவார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=895804168427119514#sthash.eDdHZvaj.dpuf