பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூலை, 2015

மகிந்த அரசாங்கம் செய்தது தமிழ் இனஅழிப்புடன் கூடிய யுத்தக் குற்றமே! விஜயகலா மகேஸ்வரன்

இன அழிப்பானது 30 ஆயிரம் அங்கவீனர்களையும்,  90 ஆயிரத்திற்கு மேற்பட்ட விதவைகளையும், 12 ஆயிரம் அனாதை சிறுவர்களையும்,  7 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ் மக்களை இன அழிப்புச் செய்து யுத்தக் குற்றத்தினை புரிந்துள்ள மகிந்த அரசாங்கம்  மீண்டும் கதிரையேற அனுமதிக்க கூடாதென முன்னாள் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஜக்கிய தேசியக் கட்சி 100 ற்கும் அதிகமான ஆசனங்களை கைப்பெற்றி ஆட்சி அமைக்கும். பிரதமராக மக்களால் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படுவார். யாழ்.மாவட்டத்திலும் ஜ.தே.க 3 ஆசனங்களை கைப்பெற்றும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.கடந்த காலங்களில் அடாவடித்தன அரசியல் வாதிகளே அரசாங்கத்தினை அமைத்து எமது நாட்டை குட்டிச்சுவராக்கியிருந்தனர். குறிப்பாக மகிந்த அரசாங்கம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொண்று குவித்து இனப்படுகொலை ஒன்றினையே வடக்கில் செய்திருந்தார்கள்.ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகணாகத்தினை மேசமான நிலையில் மகிந்த அரசாங்கம் பழிவாங்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு எமது கட்சிகள் தீர்மானித்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.