பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2015

டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மீதான வழக்கு; சட்டமா அதிபரின் ஆலோசனையை நாட பொலிஸார் முடிவு


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரம்  தொடர்பில் தவறான அறிவித்தலை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எதிராக வழக்கை தொடர்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர். 
 
இது தொடர்பிலான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின்  பணிப்பாளார் எஸ் எஸ் குகநாதன் அவர்கள்  மன்றில் ஆஜராகியிருந்தார்.
 
இது தேர்தலுடன்  சம்பந்தப்பட்ட குற்றம்  என்பதால் யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கு இதனை விசாரிக்கும்  நியாயாதிக்கம் இல்லை எனவும்,  இது தொடர்பில் எவ்வித சாட்சிகளும்  இல்லாத நிலையில் வழக்கை தள்ளுபடி  செய்ய வேண்டும்  என்றும்  அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றிகோரினார்.
 
இதற்குப் பதிலளித்த யாழ்ப்பாண பொலிஸார் வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாகவும் அதற்கு தவணை ஒன்றினை வழங்குமாறும்  மன்றில் கோரினர். 
 
அதற்கமைய குறித்த வழக்கு ஓகஸ்ட் மாதம்  05 ஆம்  திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது