பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2015

அமெரிக்கா எனக்கு அழுத்தங்களை தரவில்லை ; வடக்கு முதல்வர்


அமெரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நிஷா பில்வாலுடன் நடத்திய பேச்சுக்களின் போது தன்மீது எந்தவிதமான அழத்தங்களையும்  பிரயோகிக்கவில்லை என வடக்கு முதல்வர் க.வி.  விக்கினேஸ்வரன்  தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு பிரித்தானியாவிற்கு சென்றுள்ள முதல்வர் அங்கு உரையாற்றும் போதே அவர் இதனைத்  தெரிவித்தார்.
 
அமெரிக்காவில் நிஷா பிஸ்வாலை நான் கடந்தவாரம் சந்தித்தேன். எனினும் அந்தச் சந்தர்ப்பத்தில் எந்தவிதமான அழுத்தங்களும்  பிரயோகிக்கவில்லை. 
 
எனினும்  இன அழிப்பு தொடர்பில் அடக்கி வாசிக்குமாறு என்மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.  அந்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என  அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.