பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூலை, 2015

ஜெ. விடுதலையை எதிர்க்கும் திருத்தம் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல்




சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்க்கும் திருத்தம் செய்யப்பட்ட மனுவை கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில் 10 குறைபாடுகள் உள்ளதாக உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு சுட்டிக்காட்டியது. 

குறைகளை நிவர்த்தி செய்யுமாறு உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவுறுத்தியதையடுத்து, திருத்தம் செய்யப்பட்ட மனு இன்று (சனிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்த ஆவணங்கள், பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.