பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2015

த.தே.கூ வின் முதலாவது பரப்புரைகூட்டம் மருதனார் மடத்தில்


த.தே.கூ வின்  முதலாவது தேர்தல் பரப்புரைக்கூட்டம் மருதனார்மடத்தில் எதிர்வரும்  25ஆம்  திகதி  இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 
 
த.தே.கூவின்  தலைவர் இரா. சம்பந்தன் மற்றும்  அங்கத்துவ கட்சியின்  தலைவர்கள் அனைவரும்  பங்கெடுக்கும்  மாபெரும்  கூட்டமாக இந்தக் கூட்டம் இடம்பெறும்  என தெரிவிக்கப்படுகின்றது. 
 
ஓகஸ்ட்  மாதம்  நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் த.தே.கூ இலங்கை தமிழ் அரசு கட்சியின்  பேரில் வடக்கு - கிழக்கில் 5தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது . 
 
இதற்கான த.தே.கூவின் முதலாவது உத்தியோக பூர்வ பரப்புரைக்கூட்டம்  எதிர்வரும்  25 ஆம் திகதி  சனிக்கிழமை மாலை 3மணிக்கு மருதனார்மடம்  சந்தைத்தொகுதிக்கு முன்பாக நடைபெறவுள்ளது. 
 
இதற்கு முன்னதாக தேர்தல் விஞ்ஞாபனம்  வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஐ.தே.க வின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் கண்டியில் கடந்த 15 ஆம்  திகதி ஆரம்பமாகியது. 
 
அதேபோல ஐ.ம.சு.மு வின் பிரச்சார கூட்டம் 17 ஆம் திகதி  அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி  மகிந்த தலைமையில் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது