பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2015

மேல் முறையீட்டு வழக்கில் ஜெ.,வுக்கு தண்டனை உறுதி : ஆம் ஆத்மி


ஆம் ஆத்மி கட்சியின் தென்னிந்திய  பொறுப்பாளரும் , எம்.எல்.ஏவுமான சோம்நாத் பாரதி, புதுக்கோட்டையில் நடந்த கட்சி அலுவலக திறப்பு விழாவில்  பங்கேற்றார்.  விழாவில் பேசிய அவர்,  ‘’சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைப்பது உறுதி.  

 டெல்லியில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் குற்றமற்றவர்கள் என்பது விரைவில் வெளியுலகிற்கு தெரியவரும்.  இது போன்ற நடவடிக்கைகளால் ஆம் ஆத்மி கட்சியை ஒரு சிலர் அழிக்க முயற்சி செய்து வருகின்றனர்.  இதே போன்று எம்பிக்கள் என்னென்ன தவறுகள் செய்துள்ளனர் என்பதை பிரதமர் மோடி விசாரிக்க வேண்டும்’’ என்று கூறினார்.