பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2015

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது - மைத்திரியின் உரைக்கு பதிலளிக்கும் ஐ.ம.சு.முன்னணி


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு இன்று இரவு அவசரமாக கூடவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றிரவு ஆற்றப்பட்ட விசேட உரையினை அடுத்து, சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய இன்று இரவு 08 மணிக்கு இடம்பெறவுள்ள மத்திய செயற்குழுவில் ஜனாதிபதியின் விசேட உரை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.