பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2015

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள்


ஐ.பி.எல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் றொயல்ஸ் அணி உரிமையாளர்களுள் ஒருவரான ராஜ்குந்த்ராவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து புதிய இரு அணிகளை தெரிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் வரும் 19ம் திகதி மும்பையில் நடக்கிறது.

அதே சமயம் அடுத்த இரு சீசன்களில் தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி டஸ்கர்ஸ், புனே வாரியர்ஸ் அணிகளுக்கு விளையாட வாய்ப்பளிக்கப்படும் எனத்தெரிகிறது.

2011ம் ஆண்டு வங்கி கியாரண்டி அளிக்காத காரணத்தினால் கொச்சி டஸ்கர்ஸ் அணியின் உரிமத்தை பி.சி.சி.ஐ. ரத்து செய்தது.

இந்த விவகாரத்தில் கொச்சி அணிக்கு பி.சி.சி.ஐ. ரூ.550 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொச்சி அணி இழப்பீடு பெறுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த இரண்டு சீசன்களில் கொச்சி, பூனே அணிகள் விளையாடும் பட்சத்தில் 2018ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், சென்னை அணிகள் உட்பட மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் களைகட்டும்.