பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2015

கோபா அமெரிக்க கால்பந்து: இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆர்ஜன்டினா


பரகுவேக்கு எதிரான கோபா அமெரிக்க கால்பந்து அரையிறுதி போட்டியில், ஆர்ஜன்டினா 6-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
44-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடை பெற்று வருகிறது. ஏற்க னவே இதன் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் பெரு அணியை தோற் கடித்து இறுதி போட் டிக்கு முன்னேறியுள்ளது சிலி.

இந்நிலையில்  நேற்று அநடந்த 2-வது அரை இறுதி ஆட டத்தில் 14 முறை சம்பி யனான ஆர்ஜன்டினா 2 தடவை கோப்பையை வென்ற பரகுவே அணி கள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலு த்திய ஆர்ஜன்டினா முதல் பாதி ஆட்டத்தின் பாதி நேரத்திலேயே 2-0 என்ற கணக்கில் முன் னிலை பெற்றது.
அந்த அணியின் தலைவர்; மெஸ்சி அற்புத மான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் சக வீரர்கள் கோல் அடிக்க உதவினார்.
இறுதியில் ஆர்ஜன்டினா 6-1 என்ற கோல் கணக்கில் பரகுவே அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன் னேறியது.