பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2015

வடக்கில் மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் தயாராக இல்லை! மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்


வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தில் உண்டு கழித்த படையினருக்கு அந்த நிலங்களை சுலபமாக விடுவிப்பதற்கு விருப்பமில்லை என மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மாலை 7.30 மணியளவில் யாழ்.சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பாக நாம் தொடர்ந்தும் பேசி வருகின்றோம் ஆனால் படையினர் மக்களுடைய நிலங்களை சுலபமாக விடுவிக்க தயாராக இல்லை.
இந்நிலையில் அவர்களுடன் சாதகமாக பேசியே காணிகளை விடுவிக்க வேண்டும்.
அவர்கள் அந்த நிலங்களில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து உண்டு கழித்தவர்கள் என்பதால் நிலத்தை சுலபமாக விடுவிக்க தயார் இல்லை. என அவர் மேலும் கூறியுள்ளார்